Welcome
to Shaik Foundation!
சேக் அறக்கட்டளை உங்களை இனிது வரவேற்கிறது!
The sole object of the Trust is to promote education from primary to highest level of education.
Shaik Foundation
SHAIK FOUNDATION is a trust primarily focusing on Education to under privileged population. The Foundation is formed in 2009 and mainly operating in southern part of India. The sole object of the Trust is to promote education from primary to highest level of education.
Since the inception, we have identified around 500 rose buds with good academic records, who were about to stop their education due to lack of financial support and helped them. We are satisfied with what we have achieved with our available financial source in this small period of time. By Gods grace, we will expand our services to a new height

About Us
SHAIK FOUNDATION was started by a group of four family members in 2009.It is tragically true that, the poor families stop the kids in our society due to financial crises from getting education. This is plainly visible mostly in villages and towns. Having seen that, with a little thirst for education for the needy, SHAIK FOUNDATION extends a helping arm to them. It requires great attention to identify them.
சமுதாய நலன் கருதி கல்வியின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு சமூக சேவைக்காக நான்கு குடும்ப உறுப்பினர்களால் சேக் அறக்கட்டளை நிறுவப்பட்டது. அந்த நான்கு உறுப்பினர்களின் சேமிப்பை பொருளாதார மூலதனமாகக் கொண்டு இந்த அறக்கட்டளை இயங்கி வருகிறது.
வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் இளம் சிறார்களுக்கு அடிப்படைக்கல்வியிலிருந்து உயர் நிலை கல்விதரம் அடையச் செய்வதற்கு பொருளாதார ரீதியாக உதவுவதே இந்த அறக்கட்டளையின் முதன்மை நோக்கமாகும்.
What we do?
- Provide an opportunity of education for the underprivileged.
- Provide opportunities and facilities in stopping the school dropouts, due to financial crisis.
- Break away the social and cultural barrier, which stops education for the needy.
- Emphasize the importance of education and make better citizens.
சேக் அறக்கட்டளையின் “ தாருல் ஹுதா பெண்கள் அரபிக் கல்லூரி”
சேக் அறக்கட்டளையை சுற்றியுள்ள பகுதியில் வாழும் பெண்கள் இஸ்லாமிய ஒழுக்க நெறிகளை முழுமையாக விளங்கி பயன் பெறும் விதமாக, திறமை மிக்க ஆலிமாக்களைக் கொண்டு கடந்த 2016ஆம் ஆண்டு சேக் அறக்கட்டளையின் நிர்வாகத்தின் கீழ் “தாருல் ஹுதா பெண்கள் அரபிக் கல்லூரி” தொடங்கப்பட்டது.
இஸ்லாமிய கல்வியை முறையாக கற்று, வருங்கால சந்ததிகளை நேர்வழி பெற வைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு, கடந்த 2017ஆம் ஆண்டு “மூன்று வருட ஆலிமா பட்டப்படிப்பு” தொடங்கப்பட்டது.
கடந்த 16.12.2021 அன்று மூன்று வருட ஆலிமா படிப்பை நிறைவு செய்து முழு தேர்ச்சி பெற்ற 16 ஆலிமா மாணவிகளுக்கு ‘ஸனது’ என்னும் ஆலிமா பட்டம் வழங்கப்பட்டது.
சேக் அறக்கட்டளையின் அடுத்த முயற்சியாக, மார்க்கக்கல்வியோடு உலகக்கல்வியும் ஒருசேர கற்று பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் +2 தேர்ச்சி பெற்ற 10ஆலிமா மாணவிகள், ஆலிமா பட்டப்படிப்போடு சேர்த்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – தொலைதூர கல்வித் திட்டத்தின்கீழ் BA (Islamic Studies) பட்டப்படிப்பு படிப்பதற்கு முழு ஏற்பாடு செய்து, அதற்குண்டான முழு கல்விக்கட்டணத்தையும், சிறப்பு பயிற்சி (Special Coaching classes) கட்டணத்தையும் சேக் அறக்கட்டளை பொறுப்பேற்றுக் கொண்டது.
அதுபோல் கடந்த கல்வியாண்டு (2021-22) ஆலிமா வகுப்பில் சேர்ந்த +2தேர்ச்சி பெற்ற 13 மாணவிகள், ஆலிமா பட்டப்படிப்போடு சேர்த்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மூலமாக B.Com படித்து வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக இந்த கல்வியாண்டும் (2022-23) ஆலிமா வகுப்பில் சேரும் +2தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு ஆலிமா பட்டப்படிப்போடு இணைத்து B.Com படிப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.